“எனக்காக வந்தவர்களுக்கு நன்றி. எதிர்வரும் நாள் ஒன்றில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்.” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாட்களில் அவருக்கு ஆதரவாக ஒன்றுகூடியவர்களுக்கு அவர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து இன்று (01) ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.