நம்ம வழி தனி வழி.. ரஜினி ஸ்டைலில் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் கொடுத்த சஞ்சு சாம்சன்!

0
2

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக இந்திய அணி ‘சாம்பியன்’ பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் சரவெடியாக வெடித்தார். 46 பந்துகளில் 89 ரன்கள் அடித்த சாம்சன், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இறுதிப்போட்டி மட்டும் இன்றி அரையிறுதியிலும் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியிலும் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மூன்று முக்கியமான ஆட்டங்களிலும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சனுக்கு பல தரப்பிலும் பாராட்டுகள் குவிகின்றன. இதற்கிடையே நேற்று போட்டி முடிந்த பிறகு பேருந்தில் வீரர்கள் தங்கள் ஹோட்டலுக்கு திரும்பும் போது வாஷிங்டன் சுந்தரும் சஞ்சு சாம்சனும் ஜாலியாக உரையாடியுள்ளனர். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வாஷிங்டன் சுந்தர் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், சஞ்சு சாம்சனிடம், “என்ன தல.. நாக் அவுட் மேட்ச் என்றாலே 80, 90 தானா?” என்று கேட்டார். இதற்கு பதிலளித்த சஞ்சு சாம்சன், “நம்ம வழி தனி வழி” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here