மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய அமைச்சின் நலன்புரிசங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான நிகழ்வு நேற்று (15-03-2018) அமைச்சில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் அமைச்சினை சூழவுள்ள ஏனைய தொழிற்தளங்களின் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்து அவர்களின் பங்களிப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.