காணாமல் போயிருந்த நிலையில் களுகங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட பெண்ணொவர் சில நாட்களின் பின்னர் வீடு திரும்பிய சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 வயதுடைய குறித்த பெண் அவரது குழந்தையுடன் காணாமல் போயிருந்த நிலையில் , திரும்பி வரும் போது குழந்தையுடனேயே வந்துள்ளார்.சமூக வலைத்தளம் ஊடாக நபரொருவருடன் தகாத உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ள குறித்த பெண் வீட்டை விட்டு வௌியேறி நுவரெலியா பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் குறித்த இளைஞருடன் தங்கியிருந்ததாக காவற்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 10ம் திகதி களுகங்கையில் மிதந்துக்கொண்டிருந்த அடையாளம் தெரியாத சடலமொன்று களுத்துறை காவற்துறையால் மீட்கப்பட்டு நாகொட மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் காணாமல் போன பெண்ணின் தந்தை வந்த குறித்த சடலம் காணாமல் போன தனது மகள் என அடையாளம் காட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து குறித்த சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் , குறித்த பெண்ணை காணவில்லை என காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டு சரியாக 25 நாட்களின் பின்னர் காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.