நல்லதண்ணியில் இ.போ.ச பேருந்து சாரதி அதிரடியாக கைது!

0
12

நல்லதண்ணி பகுதியில் உள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் அரச பேருந்தின் சாரதி ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்த போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சந்தேக நபரை கண்காணித்து வந்த வேலையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போதுசாரதியிடம் 2 போதை வில்லைகள், ஹேரோயின் 77 மில்லி கிரேம் வைத்திருந்துள்ளார்.

இவ்வாறு கைது செய்ய பட்டவர் ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் சாரதியும் வட்டவளை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

சந்தேகநபரை இன்று ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here