நீராட சென்ற சென்ற இளைஞன் சடலமாக மீட்பு நல்லதண்ணி பகுயில் சம்பவம் .
வத்தளை மாபொல பகுதியில் இருந்து சிவனொளிபாதமலைக்கு வருகைதந்த குடும்பத்தினரில் ஒருவர் 19வயது இளைஞன் ஒருவர் நீராட சென்ற போது நீரில் அள்ளுண்டு உயிர் இழந்த சம்பவம் ஒன்று 03.03.2018. சினிக்கிழமை வேலையில் இடம் பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லதண்ணி பாலத்திற்கு அருகாமையில் நீராட சென்ற போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. தனது குடும்பத்தினரோ்டும நண்பர்களோடும் வந்த இவர் நண்பர்களோடு நீராட சென்ற போது குறித்த இளைஞனை நீரில் அள்ளுண்டு உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிர் இழந்த இளைஞன் 19வதுடைய சுதுவா தேவஹே துஷாந்த என்ற இளைஞனே இவ்வாறு சடலமதாக மீட்பட்டதாக நல்லதண்ணி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனின் சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் நாவலபிட்டி வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டார் .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ், க.கிஷாந்நன்