நல்லத்தண்ணி ஆரம்ப பிரிவு பாடசாலையின் உப அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.பாடசாலை வளாகத்திலே 20.03.2018. காலை மாணவபெற்றோர்களினால் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
227 கல்வி பயிலுல் குறித்த பாடசாலையில் நீண்ட காலமாக உப அதிபராக கடமையாற்றும் மேற்படி அதிபர் பாடசாலை அபிவிருத்தியிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் அதிபருடன் இணைந்து பங்களிப்பு நல்குவதில்லை என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.
குறித்த உப அதிபரின் இடமாற்றம் தொடர்பில் பல தடவைகள் அட்டன் கல்வி காரியாலத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இது வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கப்படாமையினாலே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்