இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய தலைமைகள் வேண்டும் என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் தரிந்து லியனகேன மன்னார் ஆயரைச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை – இந்தியாவின் ராமேஸ்வரம்-திருகோணமலை ஆகிய இடங்களை இணைக்கும் பசுமை நைட்ரிஜன் மற்றும் வர்த்தக பாதை வழியாக இலங்கை, BRICS கூட்டணியில் இணைந்து கொள்ளும் திட்டம் குறித்து தரிந்து லியனகே தொடர்ந்து பேசி வருகிறார்.
இலங்கை திருக்கோணமலை வழியாக இந்தியாவிற்கு வர்த்தக வழியைத் திறப்பது பற்றிய இந்த கருத்து, இலங்கை அரசியலமைப்பின் ஓர் முக்கிய வாய்ப்பாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
வன்னி மாவட்ட மக்களுக்கு தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பதுடன், தங்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இதற்குத் தேவையான தலைமைகளை இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் எனவும் தரிந்து லியனகே தெரிவித்துள்ளார்.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தரிந்து லியனகேயின் வெற்றி இலங்கையின் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.