புனித தளங்களில் ஒன்றான சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயர்பலகை காட்சிபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய விசாரணை நடத்துவதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்மத்திய மலை நாட்டின் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்கெலியா பிரதேசசபைக்குற்பட்ட பகுதியில் அமைந்துள்ள சிவனொபாதமலை இனவாதத்தை தூண்டும் வகையில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது
சிவனொளிபாதமலை என்ற பெயரிற்கு பதிலாக கௌதம புத்தபகவானின் ஸ்ரீ பாதஸ்தானம் என புதிதாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது
பௌதர்கள்.இந்துக்கள்.இஸ்மியர்கள் கிருஸ்தவர்கள் .என சகல இன மக்களும் சென்று வரும் புனித தளமான சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றமானது இனங்களுக்கிடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் அவர்களின் கவனத்திற்கு நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் மு.ராமச்சந்திரன் மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர் சுரேஷ் ஆகியோரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது
30.08.2018 அமைச்சின் அலுவகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இன நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் பெயர் பலகையை வைக்க முற்படுவோர் தொடர்பில் உரிய விசாரணையை முன்னெடுப்பதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)