நள்ளிரவு மஸ்கெலியா நகரில் கடைகளை உடைத்து கொள்ளை!

0
132

மஸ்கெலியா நகரில் நேற்று நள்ளிரவு மூன்று கடைகள் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையமொன்றும் , பஸ் தரிப்பிட வீதியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களுமே இவ்வாறு உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்படி வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களால் மஸ்கெலிய பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

சிசிரிவி கமரா காட்சிகளை ஆராய்ந்தபோது , கறுப்பு நிற ஆடை அணிந்து முகத்தை மூடியவாறு சந்தேக நபர் செல்வது தெரியவந்துள்ளது.

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மஸ்கெலியா பொலிஸார் இறங்கியுள்ளனர்.

செ.தி. பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here