நவகமுவ, கொரதொட்ட மெனிக்காகார வீதி பகுதியில் முதலாம் திகதி இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீடொன்றுக்குள் இருந்த மூன்று நபர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரகஸ் ஹந்திய பகுதியில், இக்குற்றத்தைத் திட்டமிட்டமை மற்றும் அதற்கு உதவியமை தொடர்பில் 24 வயதுடைய பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (16) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரால் இக்குற்றச் செயல் வழிநடத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் ஹோமாகம பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.




