நவராத்திரி பூஜை வழிபாடு….

0
176

நவராத்திரி பூஜையின் இறுதி நாளான 19.10.2018 அன்று பாடசாலைகளிலும் அலுவலகங்களிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டன.சிவனுக்கு நிகரான சக்தியை வழிபடும் ஒன்பது நாட்களை உள்ளடக்கிய விழாவே நவராத்திரி. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது மிகவும், முக்கியத்துவம் வாய்ந்து புரட்டாசி வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும். மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியினையும் அதன் மகிமையினையும் அறிந்த பண்டைய மக்கள் நவராத்திரி விழாவினை மிகவும் நிறப்பாக கொண்டாடி வந்தனர்.

இந்த விழாவினை முன்னிட்டு மலையக பாடசாலைகளிலும் அரச அலுவலகங்களிலும் இந்த நவராத்திரி விழா 19.10.2018 அன்று மிக சிறப்பாக நடைபெற்றன.

அந்தவகையில் மலையக மக்கள் முன்னணியின் நவராத்திரி விசேட பூஜைகள் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி வி.ராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

Photo (5)

மலையக மக்கள் முன்னணி ஒழுங்கு செய்திருந்த நவராத்திரி விழா மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வி.ராதாகிருஸ்ணன் தலைமையில் அட்டன் மலையக மக்கள் முன்னணியின் அலுலகத்தில் 19.10.2018 அன்று நடைபெற்றது.

இதில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் காரியாலய உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here