நவீன தொழில்நுட்பத்தை பெற வேண்டுமென்றால்; ஆங்கில கல்வி அறிவு மிக முக்கியமானது. பெட்டா லயன்ஸ் கழகத்தின் தலைவர் தெரிவிப்பு

0
206

மாணவர்கள் இன்று கல்வி கற்ற பின்னர் எந்த ஒரு தொழிலுக்கு செல்வதென்றாலும் கணனி அறிவு முக்கியமானது அந்த அறிவை பெறுவதற்கும் உலகமயமாவதற்கும் ஆங்கில கல்வி அறிவினைப் பெற வேண்டும் என பெட்டா லயன்ஸ் கிளப் தலைவர் இலமன்நாதன் தெரிவித்தார்.
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரியின் கணனி பிரிவுக்கு நாட்காலி, கணனி மேசை, ஆசிரியர் கதிரை ஆகிய தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் மூ.மூவேந்தன் தலைமையில் நடைபெற்றது. தளபாடங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய போது மலையக மாணவர்களை பொருத்தவரையில் கல்வி மிக முக்கியமானது நீங்கள் நன்றாக படித்து பல்கலைக்கழகம் சென்று படித்தால் தான் நல்ல தொழில் ஒன்றுக்கு செல்ல முடியும் இவ்வாறு பல்கலைகழகம் கிடைத்தும் வறுமை காரணமாக செல்ல முடியாதவர் இருந்தால் அவர்களுக்கு எமது கழகத்தில் உள்ள சிலர் உதவ காத்திருகிறார்கள்.

அதே நேரம் இந்த பாடசாலைக்கு மேலும் சில உதவிகளை செய்ய எதிர்ப்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்

இந்நிகழ்வுக்கு பெட்டா லயன்ஸ் கழகத்தின் செயலாளர் மதியழகன் , தலைவர் இலமன்நாதன், பொருளாளர் லயன் ராம் ஜெயகணேஸ், ஜி.பி.என். பணிப்பாளர் சின்னையா சுரேஸ் மற்றும் அக்கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here