நவீன முறையில் கட்டப்பட்ட கொழுந்து மடுவம் தலவாக்கலை பெருந்தோட்டத்திற்கு சொந்தமான நானுஓயா டெஸ்போட் மேல் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை
நவீன முறையில் அமைக்கப்பட்ட கொழுந்து மடுவம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
நவீன முறையில் அமைக்கப்பட்ட இக் கொழுந்து மடுவம் ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு எத்தனை கிலோ கொழுந்து பறித்துள்ளார். ஒரு தொழிலாளி ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் வேலைக்கு வந்துள்ளார் என்பதும் அறியக் கூடிய ஒரு இடம் அத்தோடு தோட்ட அதிகாரிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் உள்ள தொடர்பாடல் நீடிக்கும் ஒரு இடமாகவும் நவீன டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட இக்கொழுந்து மடுவம் தலவாக்கலை பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் ராஜதுரை மற்றும் பொதுமுகாமையாளர் சேனக அலவத்த அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க டெஸ்போட் தோட்ட பொது
முகாமையாளர் அனுர திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலில் தோட்ட உதவி முகாமையாளர் மனோகரன் டில்ரோய் தலைமையில் அமைக்கப்பட்டது.
இக் கொழுந்து மடுவத்தை தலவாக்கலை பெருந்தோட்ட விவசாய வியாபார ஆலோகசர் கலாநிதி டான் சீவரட்ணம் அவர்கள் திறந்துவைப்பதை படங்களைக் காணலாம்.
டீ. சந்ரு