நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே நாளை10) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, சேவையில் ஈடுபடவுள்ள செரியாபாணி(Cheriyapani) கப்பல், இன்றும் சோதனை ஓட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாகை – இலங்கை கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.