ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, சற்று நேரத்துக்கு முன்னர் சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு பஸில் ராஜபக்ச மீண்டும், நாடாளுமன்றத்தில் சபாபீடத்துக்குள் வருவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக, மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.