ஒக்டோபர் 1 ஆம் திகதி நாடு திறக்கப்பட்ட பிறகு நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் பராமரிக்கப்படும் நடைமுறைகளை உருவாக்க கோவிட் செயலணி சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை மீண்டும் திறப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, நாட்டின் மக்கள் தொகையில் 52.3 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இப்போது கோவிட் தடுப்பூசியை முடித்துவிட்டனர்.
கோவிட் தடுப்பூசி பெறாத நபர்கள் பொது இடங்களில் நுழைய முடியாது என்று எந்த வழிகாட்டுதலும் வெளியிடப்படவில்லை என்றார்.