நாடு பற்றி எரிக்கின்றது விழித்தெழுங்கள், எமக்கு தேவை வீரன், பிடில் வாசிக்கும் நிரோ அல்ல.

0
179

இலங்கையில் தற்போதைய எரிபொருள் நெருக்கடியுடன் அரசாங்கத்தின் மீது சர்வதேசத்தில் மாத்திரமல்ல உள்நாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய எரிபொருள் நெருக்கடியுடன் அரசாங்கம் மீது சர்வதேசத்தில் மாத்திரமின்றி தேசிய ரீதியிலும் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது என்பது தெளிவானது.

மக்கள் முன்பை விட கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர். எமக்கு தேவை வீரன், பிடில் வாசிக்கும் நிரோ அல்ல. நாடு பற்றி எரிக்கின்றது விழித்தெழுங்கள் என சனத் ஜயசூரிய கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here