கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
மேலும், நாட்டை முடக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் பெறுவதை கட்டாயமாக்குவதற்கான சட்ட வரைவை உருவாக்குவதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, கீழ்மட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.