நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த உத்தரவு நேற்று (26.9.2024) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு அநுர குமார உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று (27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நேற்று (26) வெளியிட்டார்.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.