நாடு முழுவதும் வர்த்தக நிலையங்களில் சோதனை

0
6

பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சந்தைகளில் அநீதிக்கு உள்ளாவதை தடுக்க, நுகர்வோர் விவகார அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 23 வர்த்தக நிலையங்கள் நேற்று (01) சோதனை செய்யப்பட்டன.

அந்த வர்த்தக நிலையங்களில், காலாவதியான பொருட்கள், விலைகளைக் காட்சிப்படுத்தாமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துதல், பொருட்களில் இருக்க வேண்டிய தகவல் இல்லாமல் விற்பனை செய்தல் உள்ளிட்ட மீறல்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை, வர்த்தக நிலையங்களில் சோதனைகள் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன், விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில், சுமார் 16 நிறுவனங்கள் நன்கு அறியப்பட்ட வர்த்தக நிலைய வலையமைப்புகள் என்று கூறப்படுகிறது.

அதன்படி, வர்த்தக நிலையங்கள் உட்பட சந்தையிலிருந்து பொருட்களை வாங்கும்போது காலாவதி திகதி மற்றும் பிற தகவல்களை தொடர்ந்து சரிபார்க்குமாறு நுகர்வோரை அதிகாரசபை வலியுறுத்துகிறது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, ​​172 வர்த்தக நிலையங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றங்கள் அந்த நிறுவனங்களுக்கு 6.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் அபராதமும் விதித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here