லங்கையில் தற்போது போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் காரணமாக போலி நாணயத்தாள்களின் புழக்கத்தை தடுப்பது மற்றும் பொது மக்களின் கைகளில் புழங்குவதை தடுப்பது தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பண்டிகை நாட்களின் மக்களின் பாதுகாப்பிற்காகவும், சந்தேகநபர்களை கைது செய்யவும் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.