நாட்டிக்கும் வீட்டிக்கும் ஒரு நற் பிரஜையினை உருவாக்குகின்ற பணியினை ஆசிரியர் மற்றும் அதிபர்களே முன்னெடுக்கின்றனர். ஆகவே இந்த சர்வதேச ஆசிரியர் தினத்தில் அவர்களுக்கு வாழ்த்து கூறுவதில் பெருமைப்படுகிறேன் என ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
சர்வதேச ஆசிரியர் தினம் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 5 திகதி கொண்டாடப்படுகின்ற போதிலும் இலங்கையில் ஆசிரியர் தினம் 06 ம் திகதியே கொண்டாடப்படுகின்றன.மலையக மாணவர்களின் கல்வி சுமார் 35 வருடத்திற்கு பின்னரே தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொண்ட போதிலும் இன்று பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எமது ஆசிரியர்களின் பல்வேறு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி தேசிய மட்டத்தில் எமது கல்வியினை பேசும் அளவுக்கு உயர்த்தி உள்ளமை மறைக்கவோ மறுக்கவோ முடியாத ஒன்றாகும்.
குறிப்பாக ஹட்டன் கல்வி வலயம் இன்று தேசிய மட்டத்தில் கல்வியின் தரத்தினை உயர்த்தி வருகிறது இதற்கு பிரதான காரணம் ஆசிரியர் மற்றும் அதிபர் மற்றும் கல்விபுலச்சார்ந்தவர்களின் அர்ப்பணிப்பே ஆகவே அவ்வாறான பெருமைக்குரியவர்களை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கே.சுந்தரலிங்கம்.



