நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழைபெய்யக்கூடும்!!

0
135

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென், சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மாகாணங்களுடன், மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக காலி மற்றும் மாத்தறை ஊடாக கொழும்பு வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடற்படையும் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here