நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

0
66

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பு இன்று (14) மாலை 6:00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு 2 கட்டங்களின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.மேலும், பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை மற்றும் ஹாலியால, கண்டி மாவட்டத்தில் மெத தும்பற ஆகிய பகுதிகளின் 1 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதனடிப்படையில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. அளவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது..

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here