எட்டியாந்தோட்ட பிரதேச பல தோட்டங்கள் அமைந்துள்ளது இந்தத் தோட்டங்களில் வாழும் மக்கள் தாங்கள் அன்றாட உழைத்து சம்பாதிக்கும் ஆயிரம் ரூபா வருமானத்தினை பல தேவைகளை நிவர்த்தி செய்கின்றன.
இந்த நிலையில் இன்று வாராந்த சந்தை யில் மரக்கறிகளின் விலை மிக அதிகமாக காணப்பட்டதாக மக்கள் கவலை தெரிவித்தனர் இதன்போது 1976 ஆம் ஆண்டு காணப்பட்ட பஞ்சகாலத்தில் கூட இவ்வளவு விலை அதிகரிப்பு காணப்படவில்லை மற்றும் மக்களுக்கு இவ்வளவு பொருளாதார நெருக்கடி காணப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
மற்றும் அப்போதைய காலத்தில் ஏழு பிள்ளைகளை கொண்ட குடும்பங்கள் கூட வீட்டு விவசாயம் செய்தேனும் தங்கள் குடும்பங்களை காப்பாற்றி வந்தனர் ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இவ்வாறான பஞ்சப் நிலைமை ஒரு குழந்தையைக் கூட உணவு வழங்க முடியாத பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளோம் என மக்கள் பெரும் கவலை தெரிவித்தனர். மற்றும் மரக்கறி யின் விலை பெருமளவு அதிகரித்துள்ளது.
ஆயிரம் ஆயிரம் ரூபா எடுத்துச் சென்றால் மூன்று வகையான மரக்கறிகளையே பெற்றுக் கொள்ள முடிகின்றது என பெரும் கவலை தெரிவித்தனர்.