நாட்டின் மிக முக்கிய நகரங்களான கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.மேலும், பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டை பகுதிகளில் காற்று மாசு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கமைய இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.