நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த புதிய உபகரணங்கள் அறிமுகம்.

0
122

நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

போராட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

கண்ணீர் புகையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய ஹெல்மெட், தடியடி நடத்தும் தடி, கண்ணீர் புகை மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொலிஸ் அதிகாரிகள் புதிய உபகரணங்களின் அட்டைகளை அகற்றி அவற்றைப் பயன்படுத்துவதைக் காட்டும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் கேள்வி எழுப்பப்பட்டன. இந்த புதிய சாதனங்கள் அனைத்தும் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக பாவனையில் இல்லாத இந்தக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, புதிய உபகரணங்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தப் பொருட்கள் புதிதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, பலரும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here