நாட்டில் இறப்பு வீதம் அதிகரித்தது ; பிறப்பு வீதம் குறைந்தது

0
77

பொருளாதார பாதிப்பினால் நாட்டில் இறப்பு வீதம் உயர்வடைந்து, பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சமூக கட்டமைப்பில் மக்கள் வாழும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (6) இடம்பெற்ற வரித்திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் 57 இலட்சம் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களில் 91 சதவீதமானோரின் வாழ்க்கை செலவுகள் உயர்வடைந்துள்ளன.

பெரும்பாலான குடும்பங்கள் மூன்று வேளை உணவை இரண்டு வேளையாக மட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால் நாடு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டு மொத்த சனத்தொகை வளர்ச்சி 1 இலட்சத்து 44 ஆயிரத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. பிறப்பு வீதமும், குறைவடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தவர்களில் 7120 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

நிவாரணம் வழங்கி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here