நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் பல்வேறு பிரதேசங்களின் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் வீதி அபிவிருத்திக்காக கொண்டு வந்து கொட்டிய கல்லை கூட எடுத்து சென்றார்கள்,பல வீதிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள் ஆனால் புனரமைக்கப்படவில்லை.எனினும் நோர்வூட் பிரதேச சபையில் மாத்திரம் கடந்த காலங்களில் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலையிட்டால் சுமார் ஆறு கொடி ரூபா செலவில் வீதிகள் மாத்திரம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த வீதியை கூட நாங்கள் அன்று அடிக்கல் நாட்டினோன் இன்று 9 கோடி ரூபா செலவில் வீதி அபிவித்திகள் நடைபெற்றுவருகிறது என நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி தெரிவித்தார். நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள பல ஆலயங்களில் புனரமைப்பதற்காக வேலைகளை தொடங்கி விட்டு நிதி இல்லாததன் காரணமாக கைவிடப்பட்டுள்ள 14 ஆலங்களுக்கு முதல் கட்டமாக 2 லட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கமைய கெம்பியன் மேல் பிரிவு ஆலயம் புனரமைப்பதற்காக இந்த இரண்டு லட்சம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டு புனரமைப்பு பணிகளை இன்று (25) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
பொகவந்தலா பகுதியில் இன்று பல்வேறு வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது சம்பள பிரச்சினை மற்றும் அரசாங்கத்திற்கு நிதி நெருக்கடிகள் காணப்பட்ட போதிலும் இந்த பிரதேசத்தின் அபிவிருத்திகள் நிறுத்தப்படவில்லை. விவசாய நடவடிக்கைகளுக்காக பல்வேறு உதவிகள் கடந்த காலங்களில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன அதனால் அந்த வேலைகளும் நிறுத்தப்படவில்லை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்துடன் பேசி விவசாயம் செய்வதற்காக காணிகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார் ஆகவே நீங்கள் ஒற்றுமையாக இருந்து எங்களுக்கு தொடர்ந்தும் ஒத்துழைத்து வந்தால் இந்த பிரதேசத்திற்கு தேவையான அபிவிருத்தியினை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஊடாக பெற்றுக்கொடுப்போம் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்.



