நாட்டில் ஏற்பட்டுள்ள இப் பொருளாதார சூழ்நிலைக்கு முழுக்காரணமும் சரியான முகாமைத்துவம் இன்மையே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிடுகின்ற போது நாட்டில் கேஸ் இல்லை,மின்சாரம் இல்லை,பால்மா இல்லை எவ்விதமான மக்களின் அடிப்படை பொருட்களும் இல்லை.விலைவாசியும் உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலைக்கு காரணம் அரசாங்கத்தின் சரியான முகாமைத்துவமின்மையே காரணமென சுட்டிக்காட்டினார்.