வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையின் கீழ் கொள்கை வகுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, Green paper மற்றும் White paper பத்திரங்கள் முன்வைக்கப்படும் சம்பிரதாயத்தின் மூலம் முறையான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படு இறுதித் தீர்மானங்களுக்கு வரும் வழமை அமைந்து காணப்படுகின்றன. என்றாலும், தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்த செயற்பாடுகளில் அவ்வாறன எந்தப் பத்திரங்களையும் முன்வைக்காமல், வெறுமனே விளக்கக்காட்சி மாத்திரமே முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, தற்போதைய கல்விச் சீர்திருத்த நடவடிக்கையில் நெருக்கடி நிலையொன்று எழுந்து காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் கல்விச்சீர்திருத்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சான்றுகள் மற்றும் ஆதாரங்களுடன் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தி வகுத்த கல்விக் கொள்கையில் நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறைமைகள் காணப்படுகின்றன என்றும், இது பௌதீக மற்றும் மனித வளங்கள் சார்ந்த குறைபாடுகள் எதுவும் நிலவாமல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இருந்தபோதிலும், கடும் வளப் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் தற்போதைய அரசாங்கத்தின் இந்த கல்விக் கொள்கை முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, இந்த வளப் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்து வைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கு அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.




