நாட்டில் தினசரி 8 மணித்தியால மின்தடை ஏற்படும் அபாயம்!

0
166

இலங்கையில் எட்டு மணித்தியால மின்விநியோக தடையை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார்.

நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி, ஒக்டோபர் 15ஆம் திகதி வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே போதுமானது. உரிய காலத்திற்கு முன்னர் நிலக்கரி கிடைக்காவிட்டால் தினமும் 08 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

நிலக்கரிக்காக 6 மாதங்கள் காத்திருக்க முடியாது. நிலக்கரி கிடைக்கவில்லை எனில் மின்விநியோகத்தை 24 மணித்தியாலங்கள் வழங்க முடியாது.
யாராவது உதவினால் மட்டுமே நிலக்கரி பெற முடியும். போலி பிரச்சாரங்கள் முன்னெடுப்பதனை விட்டுவிட்டு தேவையான பணத்தை கண்டுபிடிக்கும் வழியை தேடுவதே முக்கியமாகும்.

இல்லையெனில் தினசரி 8 மணித்தியால மின்தடையை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here