பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன் போது நாட்டில் நிலவும் தொடர் மழை,வெள்ளம் போன்ற அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் பிரதானமாக பெருந்தோட்டத்துறை மக்களை சார்ந்தே அதிகமாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை மாகாண ரீதியாக ஒவ்வொரு குழுவை அமைத்து இவ் விடயம் தொடர்பாக ஆராய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு காணியைப் பிரித்துக்கொடுக்குமாறு கோரிக்கை முன்வைத்தோம்.
அத்தோடு இக்கோக்கையினை ஏற்றுக்கொண்ட பிரதமர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மற்றும் காணி சம்பந்தப்பட்ட அமைச்சர்களை இவ் விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கலந்துறையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, அமைசர்களான சமல் ராஜபக்ஷ, எஸ்.எம்.சந்திரசேன, ஜீவன் தொண்டமான் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
டி.சந்ரு