நாட்டில் நேற்று 2530 கொரோனா தொற்றாலர்களும், கொரோனாவால் 23 மரணங்களும் பதிவாகியுள்ளன.

0
150

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,305 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 2530ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 131,060ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 850ஆக அதிகரித்துள்ளது.

இரத்மலானை, பிலிமதலாவ, பத்தன, தலவாக்கலை, ஹால்கரன்ஓய, எல்கடுவ மெனிக்கின்ன, மாத்தறை, தல்கஸ்வல ஆகிய பகுதிகளில் இந்த கொவிட்-19 மரணங்கள் பதிவாகின. அத்துடன் மொரன்துடுவ, மஹரகம, ஹல்தொட, வஸ்கடுவ, களனி, மொரட்டுவ மற்றும் பாணந்துறை பகுதிகளிலும் கொவிட்-19 மரணங்கள் பதிவாகின.

அதேநேரம், மாத்தளையில் 3 மரணங்களும், மடுல்கல, பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் தலா இரண்டு கொவிட்-19 மரணங்களும் நேற்று பதிவாகின.

உயிரிழந்தவர்களில் 15 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here