நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0
71

சந்தையில் ஏதேனும் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், மாற்றுப் பொருட்களை கொள்வனவு செய்வது அவசியம் என வாடிக்கையாளர் விவகார மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

சில காரணங்களால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும் பொருட்களை தொடர்ந்து தேடுவதாலும் அவ்வாறான பொருட்களை வீட்டில் சேமித்து வைப்பதாலும் சந்தையில் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு அவசியமற்ற தேவை அதிகரிக்கின்றது.

இதனால் அநாவசியமாக விலை அதிகரிப்பு ஏற்படுவதாக பண்டார தெரிவித்தார்.மேலும், சந்தையில் காணப்படும் அரிதான பொருட்களுக்கு பதிலாக வேறு மாற்றுப் பொருட்களில் கவனம் செலுத்துவது முக்கியம்.அவ்வாறான சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்களை மாற்றுப் பொருட்களுக்கு வழிநடத்துமாறு அறிவுறுத்துவது உத்தமம் என பண்டார சுட்டியுள்ளார்.

கடந்த நாட்களாக எரிவாயு, எரிபொருள், பால் மா உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் பொருட்களுக்கு அவசியமற்ற தேவை காணப்படுகின்றது. மக்கள் மாற்றுப் பொருட்களை உட்கொள்ள பழகுவதன் மூலம் பணமும் மீதமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here