நாட்டில் மீண்டும் கொவிட்-19 தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நாளாந்தம் 30 தொடக்கம் 40 நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் தொற்று நோய் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அதன்படி, நேற்று திங்கட்கிழமை நாட்டில் 62 பேர் கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.