நாட்டில் மேலும் 5 கொவிட் மரணங்கள்

0
200

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.நேற்று செவ்வாய்க்கிழமை பதிவான குறித்த மரணங்களில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்குகின்றனர்.

அதில் ஆண் ஒருவர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர். மற்றைய ஆணும் மூன்று பெண்களும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இந்த 5 இறப்புகளுடன், நாட்டில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 16,335 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 668,336 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 1,534 பேர் வைத்தியசாலையிலோ அல்லது வீட்டிலோ மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

650,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here