நாட்டில் 1000 கடந்த கொவிட் மரணங்கள்…!

0
171

நாட்டில் இன்று 34 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதுவே இலங்கையில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொவிட் மரண எண்ணிக்கையாகும்.

அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1015 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

நேற்று பதிவான மரணங்களில்,18 ஆண்களும், 16 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ருவன்வெல்ல, மட்டக்குளி, நாவலப்பிட்டி, கஹட்டகஸ்திகிலிய, புத்தளம், அலவத்துகொட, பஸ்யால, முலட்டியன, பமுனுவத்த, அங்குலுகஹ, கொடகந்த, தல்கஸ்வல, ரத்கம, இரத்தினபுரி, உடுமுல்ல, ராகம, அத்தருகிரிய கிரிந்திவெல, தெமட்டகொட, வெல்லம்பிட்டி, கொழும்பு -02 ஆகிய பகுதிகளிலும், நுகேகொடை, கந்கபளை, பன்னல, பண்டாரகம, இங்கிரிய, மஹரகம, கெப்பட்டிபொல, கொட்டபொல, வட்டினாபஹ, மயிலப்பிட்டிய ஆகிய பகுதிகளிலும் நேற்று கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதுதவிர மடபாத பகுதியை சேர்ந்த 2 பேரும் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரணித்தவர்களில் 20 வயதான இளைஞர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.

இரத்தினப்புரியைச் சேர்ந்த அவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தீவிர கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்று பதிவான 34 மரணங்களில் 32 மரணங்களுக்குமே கொவிட் நியூமோனியா நிலைமையே காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here