நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் ஓடாய் தேயும் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்தவொரு அரசியல்வாதியோ அரசாங்கமோ கண்டு கொள்வதில்லை.

0
171

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து மலையகத்தில் வாழும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் ஓடாய் தேயும் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்தவொரு அரசியல்வாதியோ அரசாங்கமோ கண்டு கொள்வதில்லை. எனவே பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என விடிவெள்ளி மகளிர் இன்று (15) மாலை ஹட்டனில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்தது.
இது குறித்து ஹட்டன் விடிவெள்ளி அமைப்பின் உறுப்பினர் பொன்னையா தெய்வானை கருத்து தெரிவிக்கையில் எமது அமைப்பானது 25 தோட்டங்களில் கடந்த மூன்று வருட காலமாக பெண்களின் உரிமைக்காகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காகவும் செயப்பட்டு வருகிறது.மலையகத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைக்க நினைத்தே குறித்த ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளோம். குறிப்பாக பெருந்தோட்ட துறையிலே பணிபுரிகின்ற பெண்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை.

எனவே வாழ்வதற்கான சம்பளம் சேம நலன்கள்,தொழில் ரீதியாக பெற்றுக்கொடுக்க வேண்டிய கௌரவம் உள்ளிட்டவைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் கொள்கைகளை வகுக்க வேண்டும்.நாட்டில் ஏற்பட்டுள்ள சரிவினை தொடர்ந்து மலையகத்தில் வாழும் கர்பினி பெண்கள் மற்றும் சாதாரண பெண்கள் போசாக்கு குறைந்து காணப்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் ஏதாவது வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும்.தொழிற்சங்க ரீதியாக ஏற்படுத்தப்படுகின்ற கோயில் கமிட்டி மற்றும் நலன்புரி அமைப்புக்களில் மலையக பெண்களுக்கு வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுப்பதில்லை இதனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்ற பெண்களின் உரிமையினை பாதுகாப்பதற்காக உலக தொழிலாளர் தாபனத்தின் 189 வது சமவாயத்தை நடமுறைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

அத்தோடு இன்று உலக நாடுகளில் பேசும் பொருளாக இருந்து வருகின்ற முக்கியமான விடயம் தற்போது இரண்டு நாடுகள் இதனை அமுல் படுத்தியுள்ளன.மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு சம்பளத்துடனான இரண்டு நாள் விடுமுறை பெற்றுக்கொடுக்க வேண்டும்.இந்த விடயத்தில் மலையக அரசியல் வாதிகளின் தலையீடும்; இருத்தல் வேண்டும்.கூட்டு ஒப்பந்தங்களின் போது பெண்களின் வேலை பழுவினை அதிகரிப்பதனை நிறுத்தப்பட வேண்டும்.இதே சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுதார்.

இந்த சந்திப்பின் போது கருணாநிதி கலைமணி கருத்து தெரிவிக்கையில்….
பொகவந்தலா டின்சின் என்று ஒன்று இருப்பது இந்த அரசியல் வாதிகளுக்கோ தொழிற்சங்களுக்கோ,தொழில் திணைக்களத்திற்கோ தெரியவில்லை. இது தேர்தல் வந்தால் மாத்திரம் தான் தெரிகிறது.இதற்கு தோட்டத்தில் நடைபெறும் எந்த பிரச்சியினை தெரிவித்தாலும் கூட்டு ஒப்பந்தம் அமுலில் இல்லை அதனால் அது தொடர்பாக பேச முடியாது என தெரிவித்தார்கள்;.

ஆனால் கடந்த மாதம் நாங்களே கேட்காமல் தராசு பிரச்சினையினை கொண்டுவந்தார்கள் இந்த டிஜிட்டல் தராசினால் தான் மக்களுக்கு சம்பளமில்லை என்றார்கள் இதையே நாங்கள் ஒரு வருடமாக தெரிவித்து வந்த போதிலும் அதனை எந்த தலைவரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது நீங்கள் எங்கு போய் ஒழிந்திருந்தீர்கள்?இப்போது எங்கிருந்து வந்தீர்கள் அப்போது கூட்டு ஒப்பந்தம் இல்லை என்றால் இப்போது எங்கிருந்து வந்தது. ஆகவே கூட்டு ஒப்பந்தம் இருந்தால் தான் பிரச்சினை தீர்க்கலாம் என்பது பொய் உங்கள் தேவைகளுக்காக எங்களுக்கு உதவி செய்யலாம் என்பது தான் உண்மை.
எத்தனை தோட்டங்களில் இந்திய அனுப்பிய நிவாரணம் முறையாக சென்றடையவில்லை அதனை கூட தோட்ட மக்கள் போராடி தான் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.இதனையே யாழ்பாண மக்கள் பிரதிநிதிகள் அதனை முறையாக பெற்றுக்கொடுக்கவில்லையா?அதிலும் அரசி மாத்திரம் தான் போராடி கூட பெற்றுக்கொள்ளப்பட்டது.

மலையகத்தில் இன்று என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றது என்று மலையக அரசியல் தலைவர்களுக்கு தெரியாது தண்ணீர் பிரச்சினை உள்ளது சிறுத்தை பிரச்சினை உள்ளது உணவில்லை,நாம் உண்பதே மாவினால் செய்யப்பட்ட ரொட்டி அதனை விலை குறைத்து வாங்கி தருகிறோம் என்று கூறிய மக்கள் பிரதிநிதிகள் இன்று காணாமல் போய் உள்ளனர்.இன்று மாவும் இல்லை மந்திரியுமில்லை.

மலையகத்தில் வாழும் பெண்கள் ஒவ்வொரு நாளும் புதிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் மலையக பெண்கள் இன்று எதிர்நோக்காத பிரச்சினையே இல்லை காலையில் வேலைக்கு சென்றால் மாலை ஆறுமணிக்கு தான் வீட்டுக்கு வருகிறார்கள் அவர்களின் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியவி;லலை பிள்ளைகள் பாடசாலைக்கு போகிறார்களா?, அல்லது படிக்கிறார்களா? என்று கூட அவர்களுக்கு தெரிவதில்லை வந்தவுடன் சாப்பிட்டு நித்திரைக்கு செல்வதனை வழக்கமாக கொண்டுள்ளனர்; தயவு செய்து இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசுங்கள் பேசி பிரச்சினைகள் எதுவும் இல்லை என்ற போது மலையக பெண்களிடம் ஓட்டு வாங்குவதற்கு வாருங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here