நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அத்தியவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் நாளாந்தம் பட்டினியில் வாடுவதாகவும் இது குறித்து அரசாங்கம் கவனமெடுத்து நிவாரணமோ விலைகுறைப்போ உடனடியாக செய்ய வேண்டும் என தோழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த நாட்டுக்காக தொன்று தொட்டு அந்நியச் செலவாணியினை பெற்றுக்கொடுத்து வருபவர்கள் தோட்டத்தொழிலாளர்கள் இன்று கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு உயர்ந்துள்ளன.
இதனால் தாங்கள் மூன்று நேர சாப்பிட்டினை சாப்பிட முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் தங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதற்கு இல்லாததன் காரணமாக மிகவும் அவதிப்படுவதாகவும் இதனை ஒவ்வொரு தாயும் தாங்க முடியாது மிகவும் வறுந்துவதாகவும் தங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகி தொழிலாளர்கள் ஆரம்ப காலத்தில் எப்படி இருந்தார்களோ அப்படி ஒரு நிலை உருவாகியிருப்பதாகவும் நன்றாக படிக்கக்கூடிய பிள்ளைகள் பொருளாதார நிலை காரணமாக பட்டினையினை எதிர்நோக்கி கற்க முடியாத நிலை உருவாகியிருபப்தாகவும் எனவே எங்களின் உண்மை நிலையினை கண்டறிந்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்த மற்றுமொரு தொழிலாளி கருத்து தெரிவிக்கையில் அரசாங்கம் இன்று எங்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுத்து விட்டோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது ஆனால் எங்களுக்கு ஆயிரம் ரூபா கிடைப்பதில்லை அதற்கு பதியலாக கிலோவுக்கு 50 ரூபா தான் வழங்கப்படுகின்றன. மாதச் சம்பளமாக எல்லா கடன்களையும் கழித்து கொண்டு 100 200 ஆயிரம் என்று தான் தொழிலாளர்கள் சம்பளமாக பெறுகின்றனர்.
இதனை வைத்துக்கொண்டு எவ்வாறு தொழிலாளர்கள் உயிர் வாழ்வது எவ்வாறு பிள்ளைகளை படிக்க வைப்பது.சாப்பிடுவது என்றுற பாருங்கள் ஒரு நாள் பேருக்கு 16 தொடக்கம் 19 கிலோ கேற்கிறார்கள் சம்பளம் அதிகரிப்பதற்கு முதல் ஓரளவாவுது சம்பளம் பெற்றோம் தற்போது அதுவும் இல்லாத நிலை உருவாகி தொழிலாளர்கள் வறுமை நிலையிருந்து நாளுக்கு கடனாளிகளாகவும் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவே மலையகத்திற்கு பொருப்பான அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இதற்கு நல்ல தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்



