இணையத்தளம் ஊடான மோசடிகள் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ்துறை கணினி குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் பேஸ்புக் ஊடாக இடம்பெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தின் முதல் 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இணையத்தளம் ஊடான மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளில் சற்று அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Cyber Crime In Sri Lankaஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1,500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.இவற்றில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.