நானுஒயா காட்டுபகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு.
நானுஒயா ஈஸ்டல் தோட்டபகுதியில் காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி ஒருவரின் சடலம் 01.03.2018.வியாழகிழமை காலை 11மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மூதாட்டி 28.02.2018.புதன்கிழமை காட்டுபகுதிக்கு விறகு சேகரிக்க சென்று காணாமால் போயுள்ளநிலையில் மூதாட்டியின் உறிவினர்கள் நானுஒயா பொலிஸ்நிலையத்தில் முறைபாடு செய்திருந்தாக தெரிவித்த பொலிஸார் மூதாட்டியை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்டபோதே மூதாட்டி சடலமாக மீட்கபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்கபட்ட மூதாட்டி 80வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயார்ரெனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர் .
குறித்த சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரதே பரீசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கபட்டுள்ளதோடு பிரேத பரீசோதனையின் பின் மூதாட்டியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட உள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
டி.சந்ரு எஸ்.சதீஸ்