நானுஒயா மெனிக் தொழிற்சாலையின் ஆவணங்கள் குறைவடையும் எப்.சி.ஜடி செல்வோம் என நுவரெலியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பி.சக்திவேல் தெரிவிப்பு
நானுஒயா மெனிக் தொழிற்சாலையின் ஆவணங்கள் குறைவடைந்து காணப்படுமாயின் எப்.சி.ஜடி செல்லவும் தயங்கமாட்டோம் என இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.சக்திவேல்
பகிரங்கமாக அறிவித்து இருந்தார் 22.10.2018.திங்கள் கிழமை இடம்பெற்ற நுவரெலியா பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டம் நுவரெலியா பிரதேச செயலாளர் எம்.என்.ஆனந்த தலைமையில் இடம்பெற்ற பிரதேச கூழு கூட்டத்தின் போதே இதனை
தெரிவித்தார்.
இந்த பிரதேச கூழு கூட்டத்தின் போது அதன் இணைத்தலைவர்களான எம். திலகராஜ் பி.சக்திவேல் பி.எம்.பியசிறீ. ரொஷான் குனவர்தன் மற்றும் 66நிறுவனங்களை கொண்ட அதிகாரிகள் பிரதேசசபை தலைவர்கள் மற்றும் பலர் கலந்து
கொண்டனர்
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பி.சக்திவேல் கடந்த காலங்களில் நானுஒயா பகுதியில் உள்ள மெனிக்தொழிற்சாலையின் ஆவணங்கள் காணாமல் போயிட்டவிட்டதாக கடந்த வருடங்களில் இடம் பெற்ற நுவரெலியா பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தின் போது அறிக்கை சமர்பிக்கபட்டது ஆனால் நுவரெலியா பிரதேசசபை உறுவாக்கபட்டு சுமார் ஆறுமாத காலபகுதியில் மீண்டும் குறித்த தொழிற்சாலைக்கான ஆவணங்களை தேடி இன்றையய பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் சமர்பிக்கபட்டுள்ளது. எனவே இவ்வளவு நாளாக காணாமல் போயிருந்ததாக கூறப்பட்ட ஆவணங்கள் தற்பொழுது எங்கிருந்து வந்தது எனவும் கேள்வி ஏழுப்பபட்டது
இதன் போது நுவரெலியா பிரதேச அபிவிருத்தி கூழுவின் இணைத்தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கையில் மலையகத்தில் தொடரும் சீரற்றகாலநிலை காரணமாக
சிலபகுதிகளில் மண்சரிவுஅபாயங்கள் எற்பட்டுள்ளன எனவே மண்சரிவு அபாயங்கள் எற்பட்டுள்ள பகுதிகளுக்கு குறித்த பகுதியில் உள்ள பிரதேச செயலகங்களின் ஊடாகவே நடவடிக்கை மேற்கொள்ளபட வேண்டும் ஆனால் பிரதேச செயலகங்களில் உள்ள
அதிகாரிகள் பொய்யான காரணங்களை சுற்றிகாட்டி மனிதவள அபிவிருத்தி ஸ்தாபானத்தின் ஊடாகத்தான் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள் ஆனால் அந்த விடயத்தினை மேற்கொள்வது மனிதவள அபிவிருத்தி ஸ்தபானம் அல்ல பிரதேச செயலகங்களுடைய நடவடிக்கை எனவும் குறிப்பிட்டார்
நுவரெலியா பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுபடுவோர் சட்டவிரோதமாக நுவரெலியா நகரபகுதிக்கு வருகின்ற குடிநீரை முறையற்ற முறையில் பயன்டுத்துவதாகவும் நுவரெலியா பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் ஆராயபட்டமை
குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)