நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா பகுதியில் உள்ள இருதுக்கும் மேற்பட்ட தமிழ்,சிங்கள பாடசாலைகளுக்கு இலவச புலமைபரிசீல் வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வு நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் கையளிக்கப்பட்டது.
கல்வியால் உயர்வோம் என்ற தொனிப்பொருளிலில் வழங்கி வைக்கப்பட்ட இவ் இலவச பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் நானூஓயாவில் அமைந்துள்ள இருபதுக்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு நுவரெலியா பிரதேச சபை கேட்போர் கூடத்தில் வைத்து குறித்த பாடசாலைகளின் அதிபர்,ஆசிரியர்களிடம் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் ஊடாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்