இந்தியாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் முச்சக்கரவண்டியில் தொலைத்த சிறிய பயணப்பையை முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தேடிப்போய் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று நானுஓயாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த முச்சக்கர வண்டியில் நானுஓயாவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணம் செய்த இந்திய பிரஜை தனது பயணப்பை தவறவிட்டு நுவரெலியாவில் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார் . செ சுகுமாரன் என்ற முச்சக்கரவண்டி சாரதி நானுஓயாவில் இறங்கி பார்க்கும் போது இந்திய பிரஜை அமர்ந்திருந்த இடத்திலிருந்து பயணப்பையைக் கண்டெடுத்துள்ளார்.
குறித்த பயணப்பையில் சிறியத்தொகை பணம், சாரதி அனுமதிப் பத்திரம் , கடவுச்சீட்டு , ஏ ரி எம் காட் , தொலைபேசி ஒன்றும் இன்னும் சில முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன.
தொடர்ந்து முச்சக்கரவண்டி சாரதி நுவரெலியா சுற்றுலா பொலிஸாருக்கு தகவல் வழங்கி இந்திய பிரஜை தங்கியிருந்த விடுதியினை கண்டறிந்து இந்திய பிரஜையுடன் தொடர்பினை ஏற்படுத்தி நானுஓயா பங்களாவத்த என்ற இடத்திற்கு அழைக்கப்பட்டு பயணப்பை சரி பார்க்கப்பட்டு பொலிஸார் முன்னிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது . இவ்வாறு நேர்மையான நடத்தையை வெளிக்காட்டிய முச்சக்கரவண்டி சாரதிக்கு நன்றி தெரிவித்து பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
செ.திவாகரன் டி.சந்ரு