நானுஓயாவில் தாழிறங்கிய வீதி செப்பனிடப்பட்டது.

0
142

நுவரெலியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே மேற்படி வீதி கடந்த வாரம் தாழிறக்கம் அனர்த்தம் ஏற்பட்டது .

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வந்தது
இதனால் இவ்வழியால் பயணம் செய்யும் சிறுவர்கள், முதியோர்கள், மாணவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி. வந்தநிலையில் நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மூலம் அனர்த்த முகாமைத்து அதிகாரிகளின் பரிந்துரைக்கு அமைய குறித்த வீதியானது கற்கள் கொட்டப்பட்டு தார் கலவைகள் கொண்டு முழுமையாக புதன் கிழமை (13) செப்பனிடப்பட்டுள்ளது.

எனினும் இப்பகுதியில் மேலும் ஏற்பட்டுள்ள வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தாழிறங்கிய பகுதி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் இவ் வீதியினை பயன்படுத்தும் சாரதிகள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் அவதானமாக பயணிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

டி,சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here