நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்தவருக்கு விளக்கமறியல்!

0
86

நானுஓயாவில் நாய் ஒன்றினை சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸாரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் (10) திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் வளர்ப்பு நாய் ஒன்றினை கொடூரமாக துரத்தி, துரத்தி தடியில் தாக்கி, நடு வீதியில் தரதரவென இழுத்து பின்னர் ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேற்கொண்ட விரிவான விசாரணையின் பின்னர் அவர் நேற்றைய தினம் (28) கைதுசெய்யப்பட்டு நானுஓயா நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் அவரை இன்று (29) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, சந்தேகத்திற்குரியவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் (10) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here