நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மீன்களை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று இன்று திங்கட்கிழமை (25) விபத்துக்குள்ளாகியுள்ளது விபத்தில் காயமடைந்த மூவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து மெராயா நகருக்கு நோக்கி மீன்களை ஏற்றிச்சென்று விற்பனை செய்துவிட்டு மீண்டும் மெராவிலிருந்து நுவரெலியா நோக்கி பயணிக்கும் போதே குறித்த மீன் லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி ஆழமான பள்ளத்துக்குள் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
டி.சந்ரு செ.திவாகரன்