நானுஓயா கார்லிபேக் தோட்டத்தில் வீடுகளில் புகுந்த வெள்ள நீர் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
189

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவுவில் கார்லிபேக் தோட்டத்தில் திங்கட்கிழமை (20) பிற்பகல் பெய்த கடும் மழையால் நான்காவது முறையாகவும் கிளையாறுகள் பெருக்கெடுத்ததன் காரணமாக 4 வீடுகளினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதன் காரணமாக வீட்டு பொருட்கள், உணவு பொருட்கள், ஆவணங்கள், பாடசாலை மாணவர்களின் பாடநூல்கள், கால்நடைகள் என அனைத்தும் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன

தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதாகவும் தம்மை யாரும் கண்டுக்கொள்வதில்லை என்றும் அரசியல்வாதிகள் வாக்கு வாங்குவதற்கு மட்டுமே தம்மை தேடி வருவதாகவும் இவ்வாறான நேரத்தில் தம்மை யாரும் பார்க்க வருவதில்லை என பாதிக்கப்பட்ட பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here